YouTurn

கிருத்திகா உதயநிதியின் நடன வீடியோ எனப் பரவும் தவறான தகவல்!

கிருத்திகா உதயநிதியின் நடன வீடியோ எனப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கர்நாடகாவைச் சேர்ந்த திரிஷா ஷெட்டி என்பவர் ஆடிய நடன வீடியோவை கிருத்திகா உதயநிதி எனத் தவறாகப் பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

தமிழக முதல்வரின் மருமகளும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் மனைவியும்மான கிருத்திகாவின் அற்புத நடனம். பாராட்டுக்கள்

X link

விரிவான விளக்கம்

தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.  இதே வீடியோ கல்லூரி ஆசிரியர் நடனம் ஆடியதாகவும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?

பரவும் வீடியோவில் இருப்பது கிருத்திகா உதயநிதியா என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கங்களில் இந்த வீடியோ உள்ளதா எனத் தேடினோம். அப்படி எந்த வீடியோவும் அவரது பக்கத்தில் இல்லை. 

மேற்கொண்டு தேடியதில் பரவக்கூடிய வீடியோ ‘Trishaa Shetty (trishaashetty._)’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளதை காணமுடிந்தது. அப்பக்கத்தின் முகப்பில் (Bio) உள்ள இணைப்பில் அவர் பற்றிய விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.


கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த திரிஷா ஷெட்டி நடிகராகவும் நடனக் கலைஞராகவும் உள்ளார். ஒரு நிகழ்ச்சியில் தான் நடனம் ஆடியதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்த சிலர் அதில் இருப்பது கிருத்திகா உதயநிதி எனத் தவறாகப் பரப்புகின்றனர்.


முடிவு: 

விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி நடனம் ஆடியதாகப் பரவும் வீடியோவில் இருப்பது திரிஷா ஷெட்டி என்ற நடிகரும் நடனக் கலைஞரும் ஆவார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க